’’ஜகமே தந்திரம் ‘’டீசரீல் தனுஷ் பெயர் நீக்கம்...திட்டமிட்டு தவிர்த்தாரா தயாரிப்பாளர்?

Sinoj| Last Updated: திங்கள், 22 பிப்ரவரி 2021 (23:51 IST)

தனுஷின் ஜகமே மந்திரம் படத்தில் டீசர் இன்று வெளியான நிலையில், இதில் அவரது பெயர் திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ’’ ஜகமே தந்திரம்’’ படம் ஒடிடியில் ரிலீஸாகும் என இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இன்று
தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இப்படம் படக்குழுவினரின் இதயம் மற்றும் கடின உழைப்பால் உருவாகியுள்ளது. இப்படம் உலகமெங்கும் 190 நாடுகளில் நெட்பிளிக்ஸ் என்ற ஓடிடி தளத்தில் வெளியாகிறது எனக்கூறி இப்படத்தின் டீசரையும் இன்று வெளியிட்டார்.

ஏற்கனவே இப்படம் ஓடிடியில் வெளிட நடிகர் தனுஷ் மற்றும் கார்த்திக்சுப்புராஜ் விரும்பாத நிலையில், ஏலே படத்தில் திரையரங்கு உரிமையாளர்களுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இப்படத்தின் தயாரிப்பாளர் எடுக்க தியேட்டர் அதிபர்கள் கொடுத்த அழுத்தமே காரணம் எனத் தெரிகிறது..

இந்நிலையில் இப்படத்தை தனது நிறுவனத்தின் மூலம் தனுஷ் வெளியிட நினைத்ததாகத் தெரிகிறது. ஆனால் அவரது போனை தயாரிப்பாளர் எடுக்கவில்லை எனவும் அதனால்தான் தனுஷின் பெயரை டீசரில் இடம்பெறச்செய்யவில்லை எனவும் ரசிகர்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :