ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 11 அக்டோபர் 2023 (12:46 IST)

அக்டோபர் 12ல் ரிலீஸ் ஆகும் தனுஷ் படம்.. டிக்கெட் விலை ரூ.49 மட்டுமே..!

dhanush 740
அக்டோபர் 12 முதல் அதாவது நாளை முதல் தனுஷ் நடித்த வடசென்னை திரைப்படம் 4 நாட்களுக்கு திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான வடசென்னை திரைப்படம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்ய உள்ள நிலையில் சென்னை கமலா திரையரங்கில் வரும் 12ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு மாலை மற்றும் இரவு காட்சிகள் திரையிடப்பட உள்ளது.

இந்த காட்சிகளுக்கான முன்பதிவு உன் தற்போது தொடங்கியுள்ளது. ஒரு டிக்கெட் விலை 49 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை நான்காயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன  

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவான இந்த படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது என்பதும்  இந்த படத்தில் ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம்  ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே 50 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran