தொடர்புடைய செய்திகள்
- ஸ்டண்ட் கலைஞர் மரணம்… நாளை தமிழ் சினிமாவில் படப்பிடிப்புகள் ரத்து!
- நாகேஷுக்குப் பிறகு அந்த வேடத்தில் நடிக்கும் சந்தானம்… மத கஜ ராஜா அப்டேட்!
- மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்கும் சேரன்!
- மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகமாகும் இயக்குனர் சேரன்!
- அருள்நிதியின் ’டிமாண்டி காலனி 2’ ரிலீஸ்.. ரெட் ஜெயண்ட் எடுத்த அதிரடி முடிவு..!
டிமாண்டி காலணி 2 ரிலீஸ் எப்போது?... வெளியான அறிவிப்பு!
டிமாண்டி காலணி என்ற படத்தின் தனது முத்திரையைப் பதித்த இயக்குனர் அஜய் ஞானமுத்து, அடுத்து இயக்கிய படங்களான இமைக்கா நொடிகள் மற்றும் கோப்ரா ஆகிய இரண்டும் ரசிகர்களை பெரியளவில் கவரவில்லை. அதிலும் விக்ரம் நடிப்பில் அவர் இயக்கிய கோப்ரா படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தும் அந்த படம் அட்டர் ப்ளாப் ஆனது.
இதையடுத்து டிமாண்டி காலணி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இதிலும் அருள்நிதி நடிக்க, அஜய் ஞானமுத்து எழுதி இயக்கி, தயாரிக்கிறார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் ப்ரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன், எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். சாம் சி எஸ் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இந்த படம் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
