மீண்டும் தமிழ் பெண்ணாக நடிக்கும் பாலிவுட் நடிகை..!!

Last Updated: வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (19:11 IST)
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படூகோன் சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்திற்கு அடுத்து மீண்டும் ஒரு திரைப்படத்தில் தமிழ் பெண்ணாக நடிக்கவுள்ளார்.

பிரபல நடிகை தீபிகா படுகோன் “ஓம் சாந்தி ஓம்” திரைப்படம் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானார். தமிழில் கோச்சடையான் என்ற அனிமேஷன் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் பாலிவுட்டில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் மீனலோச்சினி என்ற கதாப்பாத்திரத்தில் தமிழ் பெண்ணாக நடித்தார். இதன் பிறகு தற்போது ஹிரித்திக் ரோஷன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் தமிழ் பெண்ணாக நடிக்கவுள்ளார்.

இந்த திரைப்படம் 13 ஆண்டுகளுக்கு முன்பு பாலிவுட்டில் வெளிவந்த “சாட்டே பே சட்டா” என்ற திரைப்படத்தின் ரீமேக் ஆகும். சாத்தே பிசாத் திரைப்படத்தில் அமிதாப் பச்சனுடன் ஹேமா மாலினி தமிழ் பெண்ணாக நடித்திருந்தார்.

தற்போது ரீமேக் செய்யப்படும் திரைப்படத்தில் ஹேமா மாலினியின் கதாப்பாத்திரத்திற்கு தீபிகா படுகோன் பொருத்தமாக இருப்பார் என இயக்குனர் ஃபாராக் கான் முடிவு செய்ததால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :