ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 4 மே 2021 (21:35 IST)

கொரொனா டெஸ்ட்.முடிவு…. நடிகர் அதர்வா டுவீட்…..

கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

எனவே, சாதாரண மக்கள் மமுதல் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பாதிக்கப்படுவருகின்றனர்.

சமீபத்தில் சினிமா பிரபலங்கள் அக்‌ஷய் குமார், சோனு சூட், ஐஸ்வர்யா ராய், உள்ளிட்ட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இன்று இயக்குநர் வசந்தபாலன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

சமீபத்தில்,  பிரபல தமிழ் இளம் நடிகர் அதர்வா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியானது. அதை தொடர்ந்து அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,  நான் கொரொனா டெஸ்ட் செய்தேன். அதில் எனக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. எனவே உங்கள் ஒவ்வொருவரின் பிரார்த்தனையாலும் அன்பாலும் நான் இதிலிருந்து மீட்டுள்ளேன். தற்போது நன்றாக உணர்கிறேன். எனது சிந்தனை மற்றும் பிரார்த்தனைகள் யாரவது கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்களைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.