ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 27 ஜூலை 2022 (16:18 IST)

சினிமா கலைஞர்கள் ஸ்டிரைக்: ரஜினி, அஜித் படங்களுக்கு சிக்கல்!

rajini ajith
ஆந்திரா மற்றும் தெலுங்கானா  மாநில முன்னணி நடிகர்கள் சம்பளத்தை உயர்த்தியுள்ள நிலையில், இதை எதிர்த்து, வரும் ஆஸ்கட் 1 ஆம் தேதி வரை தெலுங்கு சினிமாத்துறையினர் தற்போது ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள நிலையில், ரஜினிகாந்தின் ஜெயிலர் மற்றும் அஜித்தின் அஜித்61 படங்களில் சூட்டிங் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
 

தமிழ் சினிமாவில் சூப்பர்  ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஜெயிலர். அண்ணாத்த படத்திற்குப்பின் இப்படத்தை சூப்பர் ஹிட் ஆக்க வேண்டுமென ரஜினி திட்டமிட்டுள்ளார். அதனால், பீஸ்ட் படத்தை அடுத்து இயக்குனர் நெல்சன் இப்படத் திரைக்கதையில் கவனம் செலுத்தி வருகின்றார். இப்படத்தின் சூட்டிங்கும், நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் அஜித்62 பட ஷூட்டிங்கும் ஹைதராபாத்தில் நடந்து வரும் நிலையில், தெலுங்கு சினிமாத்துறையினரின் ஸ்டிரைக்கால் இப்படங்களில் ஷூட்டிங் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் விஜய்யின் ‘வாரிசு’, தனுஷின்’ நானே வருவேன்’ உள்ளிட்ட படங்களின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து முடிந்து விட்டது குறிப்பிடத்தக்கது.