நிச்சயம் செய்தவரை பிரிந்த பிரபல நடிகை

sinoj| Last Modified சனி, 3 ஜூலை 2021 (23:12 IST)

தமிழ் சினிமாவில் இளம் நடிகை மெஹ்ரீன் பிர்சடா. இவர் நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா, பட்டாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இவருக்கும் பவ்யா பிஸ்னோய் என்பவருடன் கடந்த மார்ச் மாதம் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது கொரொனா இரண்டாம் அலை பரவி வந்ததால் திருமணதேதி குறித்து இருதரப்பினரும் முடிவு செய்யவில்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் நடைபெறும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் தற்போது பவ்யாவை பிரிவதாக மெஹ்ரீன் பிர்சடா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மெஹ்ரீன் பிரசடா கூறியதாவது: என் திருமண நிச்சயம் திருமணத்தில் முடியவில்லை; இந்த முடிவும் எங்கள் இருவரின் நலன் கருதி எடுக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :