கான் திரைப்பட விழாவில் பாகுபலி

கான் திரைப்பட விழாவில் பாகுபலி


Sasikala| Last Modified வியாழன், 12 மே 2016 (13:19 IST)
புகழ்பெற்ற கான் திரைப்பட விழாவில் ராஜமௌலியின் பாகுபலி திரைப்படம் திரையிடப்பட உள்ளது.

 
 
இந்த வருட கான் சர்வதேச திரைப்பட விழா மே 11 முதல் மே 22 வரை நடக்கிறது. இந்த திரைப்படவிழாவில் படங்களில் விர்ச்சுவல் ரியாலிட்டி என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள பாகுபலி இயக்குனர் ராஜமௌலிக்கும், அப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

மே 16 
-ஆம் தேதி இந்த விவாத அரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
 
அன்றிரவு பாகுபலி திரைப்படம் திரையிடப்படுகிறது. பாகுபலிக்கு கிடைத்திருக்கும் மற்றுமொரு கௌரவம் இது.
 


இதில் மேலும் படிக்கவும் :