ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 30 ஜூன் 2017 (05:15 IST)

பாகுபலி: உலகப்புகழ் பெற்ற இந்த காட்சி காப்பியா?

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த 'பாகுபலி' திரைப்படமும் இந்த ஆண்டு வெளிவந்த 'பாகுபலி 2' திரைப்படமும் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது. குறிப்பாக முதல் பாகத்தில் ரம்யாகிருஷ்ணன் குழந்தையை கையில் ஏந்தியபடியே ஆற்றில் நீந்தும் காட்சி இதுவரை இந்திய சினிமா மட்டுமின்றி உலக சினிமாவே பார்த்திராத ஒன்று



 

 
 
ஆனால் இந்த காட்சி தற்போது காப்பியடிக்கப்பட்ட காட்சியாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. வங்கதேசத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு கனமழை மற்றும் பெருவெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது மான் ஒன்று ஆற்று நீரில் சிக்கி உயிருக்கு திண்டாடியது.
 
அந்த சமயத்தில் அங்கிருந்த சிறுவன் ஆற்றில் குதித்து மானை ஒரு கையில் தண்ணீருக்கு மேலே தூக்கிப்பிடித்து கரைக்கு கொண்டு வந்து காப்பாற்றினான். இந்த காட்சியை வனவிலங்கு ஆர்வலர் ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். இந்த புகைப்படத்தின் காப்பியாக 'பாகுபலி' காட்சி இருந்திருக்கலாம் என்று தற்போது தெரியவந்துள்ளது.