ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 26 பிப்ரவரி 2018 (22:40 IST)

இன்று தளபதி விஜய்யின் அடுத்த ரிலீஸ்: ரசிகர்கள் கொண்டாட்டம்

தளபதி விஜய் நடித்த ஒவ்வொரு படத்தின் தினத்தையும் ஒரு திருவிழாபோல் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் இன்று விஜய் குறித்த இரண்டு புத்தகங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. இந்த புத்தகங்களை வாங்கி படிப்பதில் அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

The Icon of Millions" என்ற ஆங்கில புத்தகமும், 'கோடிக்கணக்கான மக்களின் அடையாளம்' என்ற தமிழ் புத்தகமும் இன்று வெளியாகியுள்ளது. நீதிபதி டேவிட் அன்னுசாமி என்பவர் இந்த புத்தகங்களை வெளியிட அவற்றை தேசிய விருது பெற்ற எழுத்தாளர் பசுபதி ராஜன் பெற்றுக்கொண்டார். நிவாஸ், குரு, ரமேஷ், மோகன், வர்ஷா, ஸ்ரீனிவாசன் மற்றும் மணிகண்டன் இணைந்து எழுதியுள்ளனர்.

இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நீதிபதி டேவிட் அன்னுராஜன், 'இந்த புத்தகங்கள் சிறியவையாக இருந்தாலும், மாஸ் ஹீரோ விஜய் குறித்த பல அரிய தகவல்கள் உள்ள புத்தகமாக விளங்குவதாக குறிப்பிட்டார்.