போனிகபூர் வீட்டிற்குள்ளூம் புகுந்த கொரோனா: பரபரப்பு தகவல்

boney kapoor
போனிகபூர் வீட்டிற்குள்ளூம் புகுந்த கொரோனா:
Last Modified செவ்வாய், 19 மே 2020 (16:50 IST)
பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் மறைந்தநடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் வீட்டில் பணி செய்து கொண்டிருந்த பணியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இதுகுறித்து போனிகபூர் தரப்பிலிருந்தும் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: போனிகபூர் வீட்டில் செய்து கொண்டிருந்த 23 வயது சரண்சாஹூ என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலமின்றி இருந்தால் உடனே அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து உடனடியாக மும்பை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். சரண் விரைவில் குணமாகி வீடு திரும்புவார் என்ற நம்பிக்கை போனிகபூர் குடும்பத்தினர் அனைவருக்கும் உள்ளது
மேலும் போனிகபூர் மற்றும் அவரது குடும்பத்தில் உள்ள யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லை. இருப்பினும் மும்பை மாநகராட்சி அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

பாலிவுட்டில் பல வெற்றி படங்களை தயாரித்து போனிகபூர் சமீபத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை என்ற படத்தையும் தயாரித்தார் அதன் பின்னர் தற்போது அஜித் நடித்து வரும் ’வலிமை’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறார் என்பதும் இனிமேல் அவர் தொடர்ச்சியாக பல தமிழ்ப்படங்கள் தயாரிப்பார் என்று கூறப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :