ஏறிய எடை இறங்கலையே கண்ணம்மா...


Sasikala| Last Modified வியாழன், 1 செப்டம்பர் 2016 (11:13 IST)
கிட்டத்தட்ட புலம்புகிற நிலையில்தான் இருக்கிறார் அனுஷ்கா. நான் யோகா டீச்சர், நினைச்சா உடலை கூட்டுவேன், நினைச்சா இறக்குவேன் என்று அவர்விட்ட சவாலை இப்போது அவராலேயே சமாளிக்க முடியவில்லை.

 
 
பாகுபலி படத்தில் நடித்து முடித்தவர் அடுத்து இஞ்சி இடுப்பழகி படத்தில் உடம்பை கண்டபடி அதிகரித்து நடித்தார். அந்த படத்தின் கதாபாத்திரத்துக்காக சுமார் 20 கிலோ எடை போட்டார். ராஜமௌலி உள்பட அனைவரும் அனுஷ்காவையும் அவரது டெடிகேஷனையும் பாராட்டினார். அதற்குப் பிறகுதான் வந்தது வம்பு.
 
கடகடவென ஏறிய உடம்பு கடுமையாக உடற்பயிற்சி செய்தும் இறங்கவில்லை. அனுஷ்காவின் யோகாவுக்கும் இளகி கொடுக்கவில்லை உடம்பு. பாகுபலி இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா தமன்னாவுக்கு டஃப் கொடுக்கிற அளவுக்கு ஸ்லிம்மாக அழகாக மாற வேண்டும். ஆனால் உடல் எடை இறங்கினால்தானே?
 
ராஜமௌலியின் பொறுமையை சோதித்த இந்த எக்ஸ்ட்ரா லக்கேஜ், அவரிடமிருந்து அனுஷ்காவுக்கு ஏகப்பட்ட மண்டகபடியையும் வாங்கித் தந்தது. இப்போது கடைசி முயற்சியாக காலை எழுந்ததும் சைக்கிளில் கிலோ மீட்டர் கணக்கில் மிதித்துக் கொண்டிருக்கிறார்.
 
ஸ்லிம்மாகிறது எவ்ளோ கஷ்டம்னு இப்போ அனுஷ்காவுக்கு புரிஞ்சிருக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :