நேற்று ரம்யா, இன்று இந்த பெண் போட்டியாளரா? பிக்பாஸ் எலிமினேஷன் தகவல்..!
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 9 தற்போது 11-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வாரம் எதிர்பாராத விதமாக இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பொதுவாக, ஒவ்வொரு வாரமும் குறைந்த வாக்குகளை பெற்ற ஒருவர் மட்டுமே வெளியேற்றப்படுவது வழக்கம். சமீபத்தில், பார்வதி மற்றும் கமருதீன் ஆகியோர் பிக் பாஸ் விதிகளை மீறி மைக்கை அகற்றி கொண்டு ரகசியம் பேசியதால், அவர்களுக்கு வீட்டுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தச் சம்பவத்தை கண்டித்த நடுவர் விஜய் சேதுபதி, இருவரையும் தற்காலிகமாக மைக் அணிய வேண்டாம் எனக் கண்டித்திருந்தார். பின்னர் இருவரும் மன்னிப்பு கேட்ட நிலையில், மீண்டும் மைக்கை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
இந்த வார வெளியேற்றத்தில், நேற்று நடந்த நிகழ்ச்சியில் ரம்யா ஜோ வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியில் வியானாவும் வெளியேறவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒரே வாரத்தில் இருவர் வெளியேறியது, நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பையும் எதிர்பாராத திருப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva