’’பிக்பாஸ் புகழ்...’’ லாஸ்லியாவுக்கு குவியும் பாராட்டுகள்...

sinoj| Last Modified திங்கள், 5 ஜூலை 2021 (18:45 IST)

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களைக் கவர்ந்தவர் லாஸ்லியா. இவர்
இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்துள்ள ஃப்ரண்ட்ஷிப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து,
லாஸ்லியா ஹீரோயினாக
அறிமுகமாகியுள்ளார்.அதேபோல் கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் அவர் நடித்துள்ளார்.
இதில் ஃபிரெண்ட்ஷிப் படத்தின் படப்பிடிப்புகள் முடிவைந்துள்ளன.

தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடெக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தை இயக்குநர்கள் ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கியுள்ளனர்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள அடிச்சு பறக்கவிடட்டுமா என்ற பாடலை இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து
லாஸ்லியா இணைந்து
பாடியுள்ளார்.
பாடகியாக அவதாரம் எடுத்துள்ள லாஸ்லியாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இப்பாடல் இணையதளத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :