திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 11 ஜூலை 2018 (09:18 IST)

பாலாஜியை மரியாதை இல்லாமல் திட்டும் மகத்: பரபரப்பு வீடியோ

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் கடும் வெறுப்பை சம்பாதித்து வருபவர் மகத். பெரிய பெரிய ஹீரோக்கள், பல வெற்றிப்படங்கள் கொடுத்த ஹீரோக்களை போல் பந்தா செய்து கொண்டிருக்கும் மகத் இன்னும் ஒரு படத்தில் கூட உருப்படியாக நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு காரணமான மகத், இன்று பாலாஜியை நீ, வா, போ என மரியாதையில்லாமல் பேசியது மட்டுமின்றி 'காமெடி தலையா? என்றும் திட்டுகிறார். கோடிக்கணக்கானோர் பார்த்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் செயல்படும் மகத் மீது பார்வையாளர்கள் கடும் வெறுப்பில் உள்ளனர். மகத் எவிக்சன் பட்டியலில் இணைந்தால் நிச்சயம் வெளியே போவது உறுதி
 
அதுமட்டுமின்றி மகத்-பாலாஜி சண்டையை மும்தாஜ், செண்ட்ராயனை தவிர அனைவரும் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது அதைவிட பரிதாபமாக உள்ளது. மொத்தத்தில் இந்த பிக்பாஸ் 2 நிகழ்ச்சியே வேஸ்ட் என்று கூறும் அளவுக்குத்தான் இந்த நிகழ்ச்சி உள்ளது. கூடிய விரைவில் பார்வையாளர்கள் இந்த நிகழ்ச்சிக்கு மூடுவிழா வைப்பது உறுதி