திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 17 டிசம்பர் 2023 (11:27 IST)

கேஜிஎஃப் மாதிரிதான் இருக்கு.. ஆனா..? – ‘பகீரா’ டீசர் எப்படி இருக்கு?

Bagheera
கேஜிஎஃப் இயக்குனர் ப்ரசாந்த் நீல் எழுதி, சுரி இயக்கிய பகீரா படத்தின் டீசர் தற்போது வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.



இந்திய சினிமாவில் ஒரு ஓரமாக பட்ஜெட் சினிமாக்களை மட்டுமே உருவாக்கி வந்த கன்னட சினிமா இண்டஸ்ட்ரி இன்று கேஜிஎஃப்பின் வருகைக்கு பிறகு பேன் இந்தியா படங்களாக குவித்து வருகிறது. கேஜிஎஃப் 1 மற்றும் 2ம் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ப்ரசாந்த் நீல் ‘சலார்’ பட வேலைகளில் மும்முரமாக உள்ளார்.

இதற்கிடையே அவர் எழுதிய பகீரா படத்தை டாக்டர்.சுரி இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்ரீமுரளி, ருக்மினி வசந்த், பிரகாஷ் ராஜ், ரங்கய்யா ரகு, கருடா ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஜனேஷ் லோகந்த் இசையமைத்துள்ளார். கேஜிஎஃப், சலார் படங்களை தயாரிக்கும் ஹொம்பாலே பிலிம்ஸ் விஜய் கிரஹந்துர் இந்த படத்தையும் தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் ஹீரோ ஸ்ரீமுரளியின் பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக இன்று பகீரா டீசர் வெளியாகியுள்ளது. கேமரா ஆங்கிள், ஷாட்கள், பில்டப் என அனைத்திலும் கேஜிஎஃப் சாயல். எனினும் ஒரு சூப்பர்ஹீரோ கதைபோல முகத்தை மறைத்துக் கொண்டு ஆக்‌ஷனில் இறங்கும் காட்சிகள் படத்தின் மீதான சுவாரஸ்யத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

Edit by Prasanth.K