பாகுபலி 2 பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதி அறிவிப்பு


bala| Last Modified திங்கள், 22 ஆகஸ்ட் 2016 (17:19 IST)
எஸ்.எஸ்.ராஜமௌலியின் பாகுபலி 2 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர்.

இந்திய அளவில் பாகுபலி அளவுக்கு ஆக்ரோஷமாக வசூலித்த படம் வேறில்லை. அதன் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அடுத்த வருடம் ஏப்ரல் 28 -ஆம் தேதி இரண்டாம் பாகம் வெளியாகும் என்று தயாரிப்பாளர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.


 

இந்நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக்கை அக்டோபர் 23 -ஆம் தேதி பாகுபலி, பாகுபலி 2 படங்களின் நாயகன் பிரபாஸின் பிறந்தநாள் அன்று வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர்.

அனுஷ்கா முதல் பாகத்தில் வயதானவராக நடித்திருந்தார். இளமையான அனுஷ்கா இரண்டாம் பாகத்தில் வருகிறார். பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இளமையான அனுஷ்காவை எதிர்பார்க்கலாம்.


இதில் மேலும் படிக்கவும் :