‘அவதார்’ படத்தின் பட்ஜெட் எவ்வளவுனு தெரியுமா?

cauveri manickam| Last Modified செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (16:33 IST)
‘அவதார்’ படத்தின் அடுத்தடுத்த பாகங்களின் பட்ஜெட் தொகையைக் கேட்டால் மலைப்பாக இருக்கிறது.
 ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘அவதார்’. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்தடுத்த பாகம் என 4 பாகங்களை எடுக்கும் முடிவை அறிவித்தார் ஜேம்ஸ். அதன்படி, இரண்டாம் பாகம் 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் தேதியும், மூன்றாம் பாகம் 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதமும், நான்காம் பாகம் 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதமும், ஐந்தாம் பாகம் 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதமும் ரிலீஸாக உள்ளது.

இந்தப் படத்தின் பட்ஜெட் தொகை இப்போது தெரியவந்துள்ளது. சுமார் ஒரு பில்லியன் டாலர் செலவில் இந்தப் படம் உருவாக இருக்கிறது. இது அடுத்த பாகத்துக்கான தொகையா, இல்லை ஒட்டுமொத்த 4 பாகத்துக்குமான தொகையா என்ற விவரம் தெரியவில்லை. எப்படியிருந்தாலும் முதல் பாகத்தைவிட மிகப் பிரமாண்டமாக இரண்டாம் பாகம் இருக்கும் என்பது மட்டும் உறுதி.


இதில் மேலும் படிக்கவும் :