அருண்விஜய் -ஹரி இணைந்துள்ள முதல் படம்...பூஜையுடன் தொடக்கம் !

Sinoj| Last Modified புதன், 3 மார்ச் 2021 (17:13 IST)
 

நீண்டநாள் கழித்து இயக்குனர் ஹரி இயக்கத்தில் அவரது மைத்துனரும்,நடிகருமான  அருண்விஜய் ஒரு ஆக்சன் படத்தில் நடிக்கவுள்ளார்.  இப்படம் அருண்விஜய்க்கு 33வது படம். அதேபோல் ஹரிக்கு இந்த படம் 16 வது படமாகும்.
 
 இப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக  பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். மேலும், ராதிகா, பிரகாஷ்ராஜ், புகழ், அம்மு அபிராமி, ஜெயபாலன், உள்பட பலர் நடிக்க உள்ளனர்.
இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசை அமைக்க உள்ளார்.
 
 அருண்விஜய் 33’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் சக்திவேல் என்றும் கலை இயக்குனர் சக்தி வெங்கடேஷ் என்றும் எடிட்டர் அந்தோணி என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் எப்போது இதன் படப்பிடிப்பு தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பபார்த்திருந்தனர்.

இந்நிலையில், இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இதில், அருண்விஜய், விஜயகுமார், ஹரி, பவானி சங்கர், உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் பழனி, தூத்துக்குட்டி, ராமேஸ்வரம், காரைக்குடி, சென்னை ஆகிய படங்களில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :