ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 26 ஜனவரி 2022 (10:45 IST)

அனுஷ்கா ஷர்மாவின் நிறுவனத்தோடு 400 கோடி ஒப்பந்தம் போட்ட நெட்பிளிக்ஸ் & அமேசான் ப்ரைம்!

அனுஷ்கா ஷர்மா இணை நிறுவனராக உள்ள கிளீன் ஸ்லேட் பிலிம்ஸ் நிறுவனம் 400 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.

அனுஷ்கா ஷர்மாவின் சகோதரர் கர்னேஷ் ஷர்மாவின் படத்தயாரிப்பு நிறுவனமான கிளீன் ஸ்லேட் பிலிம்ஸ் நிறுவனம் அமேசான் ப்ரைம் மற்றும் நெட்பிளிக்ஸ் ஆகிய முன்னணி ஓடிடி நிறுவனங்களோடு 4 பில்லியன் ரூபாய்க்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் அடுத்து வரும் ஆண்டுகளில் 8 திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ஆகியவற்றை தயாரிக்க உள்ளது. இந்த நிறுவனத்தில் அனுஷ்கா ஷர்மாவும் இணை நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது.