திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 27 ஜூன் 2022 (14:50 IST)

’அஷோக்… இந்த நாள உன் காலண்டர்ல…” 30 ஆண்டுகளை நிறைவு செய்த ‘அண்ணாமலை’

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வெற்றிப்படங்களில் ஒன்றான அண்ணாமலை ரிலீஸாகி 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்பட வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்தது 1992  ஆம் ஆண்டு  வெளியான படம் அண்ணாமலை. இப்படத்தினை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா.  படத்தில் ரஜினியோடு குஷ்பு, ராதாரவி, சரத்பாபு, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அண்ணாமலை திரைப்படம் வெளியாகி தற்போது 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். அது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.