திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 16 நவம்பர் 2022 (08:46 IST)

அநாகரிகமாக கமெண்ட் செய்த நபருக்கு ஆண்ட்ரியாவின் ‘நச்’ பதில்!

நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ள அனல் மேலே பனித்துளி என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’அனல் மேலே பனித்துளி’. இந்த படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடி நிறுவனத்திற்காக தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தை கெய்சர் ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.  வரும் நவம்பர் 18 ஆம் தேதி சோனி லிவ் தளத்தில் நேரடியாக ரிலீஸ் ஆக உள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது. அதில் ஆண்ட்ரியா பேசும் விதமாக “மானம் என்பது என்னுடைய உடலிலோ நான் அணியும் ஆடையிலோ இல்லை, நான் வாழும் வாழ்க்கையில்தான் இருக்கிறது” என்ற வசனம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதைக் குறிப்பிட்டு ஒரு நபர் ஆண்ட்ரியாவின் காதல் வாழ்க்கையை குறிப்பிட்டு “நீங்க எல்லாம் மானத்த பத்தி பேசலாமா?” என அநாகரிகமாக கமெண்ட் செய்திருந்தார்.

அதற்கு ஒரு நேர்காணலில் பதிலளித்த ஆண்ட்ரியா “பாய் பிரண்ட்ஸ் இருந்தா காதல பத்தி பேசக் கூடாது. இவங்கள மாதிரி ஆட்கள பாத்தா சிரிப்புதான் வருது. இவங்களுக்காகதான் இந்த படத்த எடுத்திருக்கோம்” எனக் கூறியுள்ளார்.