ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 9 மே 2023 (17:32 IST)

அஜித்தின் முதற்கட்ட world tour நிறைவடைந்தது... மேனேஜர் கொடுத்த சூப்பர் அப்டேட்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகர் அஜித். இவர் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து டாப் நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார். இவர் நடிப்பையும் தாண்டி கார் ரேஸ், பைக் ரேஸ் என தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார். 
 
அந்தவகையில் தற்போது உலகம் முழுக்க சுற்றிவரும் சுற்றுலாவை மேற்கொண்டு வருகிறார். அதன் முதல் கட்டமாக சமீபத்தில் நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுக்கும் சென்று வந்தார். அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கூட ரசிகர்கள் மத்தியில் வைரலானது.  இந்நிலையில் தற்போது நடிகர் அஜித் தன்னுடைய முதற்கட்ட உலக சுற்று பயணத்தை நிறைவு செய்துள்ளார் என அவரது மேனஜர் தெரிவித்துள்ளார். அந்த பிறகு அஜித் அடுத்த மாதம் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் கலந்துக்கொள்வார்.