1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 20 ஏப்ரல் 2019 (16:01 IST)

வாக்குச் சாவடியில் தாக்கப்பட்டாரா அஜித்? ட்விட்டரில் ட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்செமகாட்டு!

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும்  கடந்த 18ம் தேதி நடைபெற்றது. அதில் பொதுமக்களும் . அரசியல் பிரபலங்களும் , சினிமா நட்சத்திரங்களும் திரண்டு வந்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். 


 
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களும், த்ரிஷா, ரெஜினா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல நடிகைகளும் ஓட்டளித்து தங்கள் கடமையை செய்தனர். அப்போது சினிமா ரசிகர்கள் பலர் நடிகர் நடிகைகளை பார்ப்பதற்கென்றே கூட்டம் கூடினர். 
 
அனைத்து தேர்தலிலும் முதல் ஆளாக ஜனநாயக கடமையை அளிக்கும் அஜித் இந்த முறையும் வாக்களிக்க முதல் ஆளாக காலை 7 மணிக்கே தன் மனைவி ஷாலினியுடன் வந்து வாக்களித்தார். 
 
அப்போது வாக்குச்சாவடியில் அஜித்தை பார்ப்பதற்காக திரண்டு வந்த ரசிகர்கள் கூட்டத்தில் திக்கமுக்காடி வாக்குச்சாவடிக்குள் நுழைந்து ஓட்டளித்துவிட்டுத் திரும்பினார்.
 
இந்நிலையில் தற்போது அஜித் ஓட்டளித்த போது அவரை சுற்றி அலைமோதிய கூட்டத்தில் அஜித்தின் தலையில் யாரோ அடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. அஜித் - ஷாலினி வரிசையில் நின்று ஓட்டளிக்காததால் இரண்டு பெண்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது போன்ற வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாக பரவி வருகிறது. 


 
மேலும் விஜய் ரசிகர்கள் இதனை தாறுமாறாக ஷேர் செய்து “#ஓட்பூத்தில்செமகாட்டு” என்ற மோசமான வார்த்தை கொண்ட ஹேஷ்டேக்குடன்  கிண்டலடித்து டிரென்டிங் செய்து வருகின்றனர்.