வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 5 செப்டம்பர் 2022 (18:19 IST)

மீண்டும் இணையும் அஜித்-சிறுத்தை சிவா: டைட்டில் இதுதான்!

ajithkumar
அஜித் மற்றும் சிறுத்தை சிவா ஆகிய இருவரும் ஏற்கனவே நான்கு படங்களில் இணைந்து பணிபுரிந்த நிலையில் மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சிறுத்தை சிவா தற்போது சூர்யா நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் என்றும் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் அஜீத் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது 
இந்த படத்திற்கு வரம் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் 2023 ஆம் ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுவதால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஏற்கனவே அஜீத்தின் அடுத்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார் என்பது தெரிந்ததே.