ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 23 ஜூன் 2024 (08:17 IST)

’கோட்’ படத்தை அடுத்து இன்னொரு படத்திலும் ஏஐ விஜயகாந்த்.. பணிகள் ஆரம்பம்..!

vijayakanth
தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’கோட்’ என்ற திரைப்படத்தில் ஏஐ டெக்னாலஜி மூலம் விஜயகாந்த் சில காட்சிகள் வருகிறார் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது இன்னொரு படத்திலும் ஏஐ டெக்னாலஜி மூலம் விஜயகாந்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நடித்து வரும் படம் படைத்தலைவன். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் கேரக்டர் உள்ளது. இந்த கேரக்டரில் முதலில் ராகவா லாரன்ஸ் நடித்து தருவதாக வாக்குறுதி அளித்திருந்த நிலையில் அவர் தற்போது பிஸியாக இருப்பதால் நடிக்க முடியவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் தான் தற்போது இந்த கேரக்டருக்கு ஏஐ டெக்னாலஜி மூலம் விஜயகாந்தை  நடிக்க வைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான பணிகள் தொடங்கி விட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

சண்முக பாண்டியன் நடித்த முதல் திரைப்படமான சகாப்தம் திரைப்படத்தில் விஜயகாந்த் நடித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அவருடைய படத்தில் ஏஐ விஜயகாந்த் நடிக்க உள்ளார் என்பதும் இதனால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Siva