முதல்வர் ஸ்டாலினுடன் யாஷிகா ஆனந்த் செல்பி: வைரல் புகைப்படம்!

yashika anand
முதல்வர் ஸ்டாலினுடன் யாஷிகா ஆனந்த் செல்பி: வைரல் புகைப்படம்!
siva| Last Updated: திங்கள், 5 ஜூலை 2021 (08:49 IST)
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுடன் நடிகை யாஷிகா ஆனந்த் செல்ஃபி எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் யாஷிகா என்பதும் அவர் சீசன் 3 நிகழ்ச்சியில் கடைசி வரை தாக்குப் பிடித்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் யாஷிகா ஆனந்த் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது


தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நேற்று ஓஎம்ஆர் சாலையில் சைக்கிளிங் சென்றார் என்பது தெரிந்ததே. அப்போது அவருடன் பலர் செல்பி எடுத்துக் கொண்ட நிலையில் நடிகை யாஷிகாவும் ஒரு செல்பி எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

நடிகை யாஷிகா தற்போது மூன்று திரைப்படங்களில் நடித்து வருவதாகவும் ஒரு வெப்தொடரிலும் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது
இதில் மேலும் படிக்கவும் :