சுனைனாவின் காதலர் இவர் தானா? அவரே வெளியிட்ட புகைப்படம்.!

Last Updated: வெள்ளி, 15 மார்ச் 2019 (11:48 IST)
காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை சுனைனா அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை , யாதுமாகி, சமர், தொண்டன் , உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 

 
மேலும்  கடந்த 2014ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த அவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அணைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்துள்ளார். இருந்தாலும் கூட இவரால் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை. 
இந்த நிலையில் சுனைனா  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவருடன் சற்று நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.இந்த புகைப்படத்தை கண்ட பல பேரும் இவர்தான் உங்களுடைய காதலா என்று கேள்வி எழுப்பி  வருகின்றனர். ஆனால், அதற்கு எந்த பதிலும் அளிக்காமல் இருந்து வருகிறார் நடிகை சுனைனா. 


இதில் மேலும் படிக்கவும் :