1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Actress simran talked about why she did not act in hindi movies

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

Actress Simran
தமிழ் சினிமாவில் 90களில் பிரபலமான நடிகையாக இருந்தவர் சிம்ரன். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான விஜய், அஜித், கமல் என பலருடனும் படம் நடித்த இவர், பேட்ட படத்தில் ரஜினிகாந்திற்கும் ஜோடியாக நடித்தார். தற்போது வயதாகியிருக்கும் சிம்ரன் பல்வேறு துணைக் கதாப்பாத்திரங்களில் மகான் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

சமீபத்தில் அஜித்குமாரின் குட் பேட் அக்லி படத்தில் சில நிமிட கேமியோ காட்சியில் நடித்திருந்தார்.  அதே போல அவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் 75 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது.

வட இந்தியாவைச் சேர்ந்தவராக இருந்தாலும் சிம்ரன் இந்தி படங்களில் நடிக்கவே இல்லை. இது சம்மந்தமாக அவர் சமீபத்தில் அளித்த நேர்காணலில் பேசியுள்ளார். அதில் “எனக்கு இந்தி படங்களில் நடிக்க வேண்டும் என தோன்றியதே இல்லை. இங்கு தென்னிந்திய மொழிகளில் நடிப்பதே எனக்கு சௌகர்யமாக இருந்தது. இங்கு எனக்கு எனது வீட்டில் இருப்பது போல இருக்கும். ஆனால் அங்கு எல்லாம் show off பண்ணுவார்கள். அதெல்லாம் என்னால் செய்ய முடியாது. அதனால்தான் என்னால் வேறு எங்கும் சென்று செட்டில் ஆக முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?