திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: ஞாயிறு, 19 ஆகஸ்ட் 2018 (17:58 IST)

நடிகர் சங்க பொதுக்குழு நடைபெற்று வருகிறது

தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னையில் கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது.
நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் இக்கூட்டம்  நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நடிகர் சங்க செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுவதுடன் சங்கத்தின் வரவு செலவு கணக்குகளும் தாக்கல் செய்யப்பட உள்ளது..
 
பொதுச்செயலாளர் விஷால் வரவேற்கிறார். துணைத்தலைவர் கருணாஸ், வரவுசெலவு கணக்குகளை வாசித்து ஒப்புதலுக்கு சமர்ப்பிப்பார். நடிகர் சங்கத்துக்கு நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட வேண்டும். கட்டிடம் கட்டும் பணி நடைபெறுவதால் தேர்தல் தள்ளிவைக்கப்படும் என தெரிகிறது. ஆனால் அதிருப்தியாளர்கள் தேர்தலை குறிப்பிட்ட தேதியில் நடத்த வேண்டும் என்று உறுதியாக உள்ளனர். இதனால் பரபரப்பு நிலவுகிறது. 
இன்றைய கூட்டத்தில்  நடிகர் சங்கத்தில் உள்ள 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதால் ரஜினி, கமல் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் கலந்து கொள்வார்களா என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த பொதுக்குழுவு நடைபெறும் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே பொதுக்குழு நடைபெறுவதால் இன்று சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.