நடிகர் பிரஷாந்துக்கு அடித்த சூப்பர் லக்! - "இது உங்களால் மட்டுமே முடியும்" வாழ்த்தும் ரசிகர்கள்!

Last Updated: வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (10:35 IST)
தமிழ் சினிமாவில் ரொமான்டிக் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் பிரஷாந்த். ஒரு காலத்தில் விஜய், அஜித்தை விட உச்சத்தில் இருந்தவர். ஏராளமான பெண் ரசிகர்களை உடைய இவரை கதாநாயகனாக மனதில் வைத்து திரைக்கதை எழுதிய இயக்குனர்களும் உள்ளனர். 


 
தன்னுடைய அழகால் பல ரசிகைகளின் மனதை கவர்ந்த நாயகன் பிரஷாந்த் கடந்த சில ஆண்டுகளாக குடும்ப பிரச்சனை மற்றும் பல்வேறு காரணங்களால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்து வந்த இவர் தற்போது அவ்வப்போது ஹீரோவாக சில படங்களில் தலைகாட்டி வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் ஜானி திரைப்படம் வெளிவந்து ரசிகர்களின் கலவையான விமர்சங்களை பெற்று ஓரளவிற்கு ஓடியது. 
 
கடந்த வருடம் அக்டோபர் மாதம் பிரபல இந்தி நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளிவந்த அந்தாதூன் திரைப்படம் மெகா ஹிட் அடித்தது.  பிளாக் காமெடி கிரைம் த்ரில்லர் படமான இதை, ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்தார். மேலும் சமீபத்தில் தான் இப்படம்  சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை என 3 தேசிய விருதுகளை பெற்றுள்ளது . 
 
இந்நிலையில் தற்போது அந்தாதூன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உருவாகவுள்ளதாகவும், இப்படத்தில் நடிகர் பிரஷாந்த் ஹீரோவாக நடிக்கவிருப்பதாகவும்  தகவல் கிடைத்துள்ளது. இப்படத்தின் தமிழ் உரிமையை அவரது தந்தை தியாகராஜன் பெற்றுள்ளார்.
 
இதை பற்றி அவர் கூறும்போது, அந்தாதூன்  திரைப்படம் ஒரு பியானோ மாஸ்டரை மையமாகக் கொண்ட   படம் என்பதால் நடிகர் பிரஷாந்த்துக்கு பொருத்தமாக அமையும். ஏனென்றால் அவர், லண்டன் டிரினிடி இசைக் கல்லூரி மாணவர் கூடவே அவர் ஒரு  சிறந்த பியானோ கலைஞர் எனவே இந்த கேரக்டர் அவருக்கு சிறப்பாக பொருந்தும். தற்சமயம் ரீமேக்குக்கான வேலைகள் நடந்து வருகிறது. இன்னும்  நாட்களில் இயக்குனர், டெக்னீஷியன்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தியாகராஜன் என்றார்.  
 
தேசிய விருதுகளை குவித்துள்ள திரைப்பதின் ரீமேக்கில் அவருக்கு பொருத்தமான கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கவிருப்பதை அறிந்த அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருவதோடு இந்த கேரக்டரில் உங்களால் மட்டும் தான் சிறப்பாக நடிக்கமுடியும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :