திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 3 மே 2021 (12:41 IST)

கொரோனாவால் பொருளாதார ரீதியில் பாதித்த தேசிய விருது பெற்ற அஜித் பட நடிகர்!

கொரோனா இரண்டாம் அலையால் வேலை வாய்ப்புகளை இழந்துள்ள நடிகர் அப்புக்குட்டி பொருளாதார ரீதியாக சிரமப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலமாக பிரபலமானவர் நடிகர் அப்புக்குட்டி. அதன் பிறகு பல படங்களில் காமடியனாக நடித்த அவர் அழகர்சாமியின் குதிரை திரைப்படத்தில் நாயகனாக நடித்து தேசிய விருதும் பெற்றார். அஜித்துடன் வீரம் உள்ளிட்ட படங்களில் அதன் பிறகு நடித்தும் அவருக்கு பெரிய வாய்ப்புகள் அதன் பின்னர் வரவில்லை.

இந்நிலையில் இப்போது கொரோனா இரண்டாவது அலையால் அவர் பெரிய அளவில் பொருளாதார சிரமத்துக்கு ஆளாகியுள்ளதாகவும், தங்கியிருக்கும் வீட்டுக்கு வாடகைக் கூட கொடுக்க முடியாத சூழலுக்கு ஆளாகியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.