வியாழன், 13 நவம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 2 ஆகஸ்ட் 2025 (08:30 IST)

கடைசியாக A சான்றிதழ் பெற்ற ரஜினி படம் எது தெரியுமா?... 36 வருடங்களுக்குப் பிறகு ‘கூலி’தான்!

கடைசியாக A சான்றிதழ் பெற்ற ரஜினி படம் எது தெரியுமா?... 36 வருடங்களுக்குப் பிறகு ‘கூலி’தான்!
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக ரஜினிகாந்த்- லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள ‘கூலி’ படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், அமீர்கான், உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் தற்போது ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே நேற்று இந்த படம் சென்சார் செய்யப்பட்டு ‘A’ சான்றிதழ் பெற்றுள்ளது.

இதனால் படத்தைக் குழந்தைகள் பார்க்க இயலாது. எப்போதும் ரஜினி படம் என்பது குழந்தைகளோடு குடும்பத்தோடு சென்று பார்க்கும் விதமாக இருக்கும். ஆனால் இம்முறை A சான்றிதழ் பெற்றுள்ளதால் அதன் வசூலில் பாதிப்பு இருக்கும் என சொல்லப்படுகிறது. கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியாகி A சான்றிதழ் பெற்ற ஒரு படம் வெளியாகி 36 ஆண்டுகள் ஆகிறது. 1989 ஆம் ஆண்டு வெளியான ரஜினி ‘சிவா’ படத்துக்கு A சான்றிதழ் கொடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.