கார்த்தியின் ’’சுல்தான்’’ பட 2வது சிங்கில் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Sinoj| Last Updated: புதன், 3 மார்ச் 2021 (21:12 IST)


கார்த்தி நடித்து தயாராகியுள்ள சுல்தான் படத்தின் முதல் சிங்கில் வெளியாகி வைரலான நிலையில் தற்போது
இப்படத்தின்
2 வது சிங்கில் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான். ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ள இந்த படம் கடந்த ஆண்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பொங்கலுக்கு மாஸ்டருக்குப் போட்டியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென்று பின்வாங்கியது.

இந்நிலையில், இந்தாண்டு மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சுல்தான் படம் குறித்து ரசிகர்கள் நாள்தோறு அப்டேட் கேட்டு வருகின்றனர்.
#Sulthan2ndSingleFromMarch5th

ஏற்கமவே இப்படம் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி ரிலீசாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சுல்தான் படத்தின் 2 வது சிங்கில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து படக்குழு கூறியுள்ளதாவது: சுல்தான் படத்தின் 2 வது சிங்கில் Yaaraiyum ivlo azhaga parkala” என்ற பாடல் மார்ச் 5 ஆம் தேதி 7 மணிக்கு ரிலீசாகும் எனத் தெரிவித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :