காதலர் தினத்தில் பேக் பென்ச் ஸ்டூடண்ட்

Webdunia| Last Modified சனி, 1 டிசம்பர் 2012 (17:20 IST)
மங்காத்தா படத்தில் அறிமுகமான மகத் தெலுங்கில் பேக் பென்ச் ஸ்டூடண்ட் படத்தில் நடித்து வருகிறார். பியா, அர்ச்சனா கவி ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

தெலுங்குப்பட இயக்குனர் மதுரா ஸ்ரீதர் இந்தப் படத்தை இயக்குகிறார். கல்லூரியில் கோட் அடிக்கும் பேக் பென்ச் ஸ்டூட‌‌ண்‌ட்டான மகத் காதலிலும், வாழ்க்கையிலும் எப்படி வெற்றி பெறுகிறார் என்பது படத்தின் ஒன் லைன்.

படத்தில் நடிக்கும் முன்னணி நட்சத்திரங்கள் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்கள் என்பதால் தமிழிலும் இந்தப் படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர். அதாவது ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழில் படம் உருவாக உள்ளது.
புதிய படக்குழுவோடு பணிபு‌ரிவது மகிழ்ச்சியாக உள்ளது என தெ‌ரிவித்திருக்கும் மகத் அடுத்த வருடம் காதலர் தினமான பிப்.14 இப்படம் வெளியாகும் என்றார்.

படத்துக்கு நல்ல தமிழ் பெயராக தேடி வருகிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :