ப்ரியா ஆனந்த் - அப்போ அதர்வா இப்போ அனிருத்

ப்ரியா ஆனந்த், அதர்வா, அனிருத், சினிமா, பொழுதுப்போக்கு
Geetha Priya| Last Updated: வியாழன், 12 ஜூன் 2014 (18:45 IST)
ப்ரியா ஆனந்த் இசையமைப்பாளர் அனிருத் இருவரும் காதலிப்பதாக கோடம்பாக்கத்தில் பேச்சு நிலவுகிறது. 
வாமனன் படத்தில் அறிமுகமான ப்ரியா ஆனந்துக்கு ஆரம்பகால படங்கள் கைகொடுக்கவில்லை. எதிர்நீச்சல் படத்தின் வெற்றிக்குப் பிறகு வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அரிமா நம்பியில் விக்ரம் பிரபுடனும், வை ராஜா வை யில் கௌதம் கார்த்திக்குடனும், இரும்பு குதிரையில் அதர்வாவுடனும், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் விமலுடனும் தற்போது நடித்து வருகிறார்.
 
இரும்பு குதிரை படப்பிடிப்பில் அதர்வாவுடன் ப்ரியா ஆனந்துக்கு நெருக்கம் ஏற்பட்டதாகவும், இருவரும் காதலிப்பதாகவும் முன்பு கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் அதர்வாவின் இடத்தை இசையமைப்பாளர் அனிருத் பிடித்துள்ளார்.
 
எதிர்நீச்சல் படத்தில் ப்ரியா ஆனந்த் நடித்த போது அனிருத்துடன் நட்பு ஏற்பட்டது. எதிர்நீச்சலுக்கு அனிருத் இசையமைத்திருந்தார். அந்த நட்பு கனிந்து காதலானதாக கோடம்பாக்கத்தில் பேச்சு எழுந்துள்ளது. ப்ரியா ஆனந்தைத் தேடி அனிருத் படப்பிடிப்பு தளத்துக்கே செல்வதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.
 
அனிருத், ஆண்ட்ரியாவின் நெருக்கம் அவர்கள் முத்தமிட்டுக் கொள்ளும் புகைப்படத்தின் வாயிலாக உலகுக்கு தெரிய வந்தது. அது எப்போதோ நடந்த ஒன்று என அந்த உறவுக்கு ஆண்ட்ரியா முற்றுப் புள்ளி வைத்தார். 
 
அனிருத் - ப்ரியா ஆனந்த் உறவு பிள்ளையார் சுழியா இல்லை முற்றுப்புள்ளியா?


இதில் மேலும் படிக்கவும் :