திருப்தியாக அமைந்த பரத்தின் 25 -வது படம்

Geetha Priya| Last Modified வியாழன், 12 ஜூன் 2014 (11:42 IST)
இன்றைய போட்டி நிறைந்த (திரை)உலகில் 25 படங்கள் நடிப்பதே ஒரு சவால்தான். ஹீரோவாக 25 படங்கள் நிறைவு செய்வது குட்டி சாதனை. ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி நடிகர் பரத்துக்கு 25 -வது படம்.
"25 - வது படம் நல்ல படமாக அமைய வேண்டுமே என்ற பயம் எனக்கு இருந்தது. ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி கதையை கேட்டதும் நம்பிக்கை ஏற்பட்டது. படப்பிடிப்பில் அந்த நம்பிக்கை பலப்பட்டது" என்று மகிழ்சியும் நிறைவும் கலந்த வார்த்தைகளில் பேசுகிறார் பரத்.
 
ஒருசில ஹிட்கள் தவிர்த்து பரத்தின் கரியரில் அனைத்தும் சுமார் வெற்றிப் படங்களே. அதிகம் எதிர்பார்த்த ஐந்து ஐந்து ஐந்து நல்ல பெயரை வாங்கித் தந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் சோபிக்கவில்லை. எதிர்பார்ப்புடன் நடித்த இந்தி ஜாக்பாட்டும் உதவவில்லை. விரைவில் மோகன்லாலுடன் நடித்துள்ள கூதறா வெளியாக உள்ளது.
 
ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணியில் பரத்தின் மனைவியாக நடிக்கிறார் நந்திதா. காமெடி கலந்த இந்தப் படத்தை இயக்குகிறவர் எல்.ஜி.ரவிச்சந்திரன். இசை சைமன், ஒளிப்பதிவு பி.ஜி.முத்தையா.
 
கவிதாலயா படத்தை தயாரித்துள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :