சுந்தர் சி நடிக்கும் வாடா!

Webdunia| Last Modified செவ்வாய், 1 ஜூலை 2008 (19:07 IST)
கோடம்பாக்கத்தில் சுந்தர் சி-க்குதான் டிமாண்ட். மினிமம் கியாரண்டி இயக்குனர் என்ற நற்பெயரை நடிகராகவும் தக்கவைத்துள்ளதே டிமாண்டுக்கு காரணம்.

தீ, பெருமாள் படங்களைத் தொடர்ந்து சுந்தர் சி நடிக்கும் படம் வாடா!

வலி விலக்கு கிடைக்குமா என்ற சந்தேகத்தை தூண்டும் மரியாதைக்குரிய இந்தப் பெயரை படத்துக்கு வைத்தவர், படத்தை இயக்கப் போகும் ஏ. வெங்கடேஷ். படத்தை ஸ்கிரீன் பிளே என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது.

கதை முதல் கதாநாயகி வரை இனிமேல்தான் பிடிக்க வேண்டுமாம். அதுவரை சும்மா இருப்பானேன் என்று தினாவிடம் பாடல் கேட்டிருக்கிறார்கள். அவரும் ஒரு ரீ-மிக்ஸ் உள்பட ஐந்து பாடல்களுக்கு டியூன் போடும் வேலையில் பிஸியாக இருக்கிறார்.
அர்ஜுனை வைத்து இயக்கும் துரை முடிந்ததும் வாடாவை இயக்குகிறார் ஏ. வெங்கடேஷ்.


இதில் மேலும் படிக்கவும் :