யுவராஜ் சிங் கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல.. சிறந்த குடும்ப இஸ்திரி... மனைவி உருக்கம்

VM| Last Modified வெள்ளி, 1 மார்ச் 2019 (17:54 IST)
யுவராஜ் சிங் தனது மனைவியின் பிறந்த நாளை நேற்று உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தார்.  இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 
இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கிரிக்கெட்டில் மட்டுமல்ல வாழ்க்கையில் சிறந்த ஸ்கோர் செய்து வருகிறார்.
 
மனைவியின் அன்பை பெற்றவர்களின் போட்டி வைத்தால் நிச்சயம் யுவராஜ்  சிங் வெல்வார். ஏனெனில் சிறந்த கணவனாக, மனைவியின் ஆசைகளை நிறைவேற்றி வருகிறார். யுவராஜ் சிங்கின் மனைவி ஹஸில் கீச் நேற்ற தனது 32வது பிறந்த நாளை கணவருடன் கொண்டாடி மகிழ்ந்தார். 
 
இது தொடர்பாக புகைப்படங்களை பகிர்ந்து ஹாசல் கீச் உருக்கமாக கருத்து பதிவிட்டுள்ளார். நேற்றுடன் 32 வயது ஆகிவிட்டது. இந்த பிறந்த நாள் என்ககு மிகச்சிறந்த பிறந்த  நாள். என்னை சுற்றி அன்பு நிறைந்தவர்கள் இருந்தார்கள். எனக்கு தெரியாமல் உங்களை இங்கு அழைத்துவந்து என் அன்பு கணவர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். நன்றி எனபதிவிட்டுள்ளார். இந்த விழாவில் அஜித் அகார்கர், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
 
இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

 


இதில் மேலும் படிக்கவும் :