புதன், 6 டிசம்பர் 2023
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 5 ஜூன் 2023 (13:22 IST)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் மழை வந்தால், டிரா ஆனால் யார் சாம்பியன்?

India -australia test
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி ஜூன் 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது என்பதும் இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த போட்டியில் பங்கேற்க இந்திய அணியினர் ஏற்கனவே லண்டன் சென்று விட்டனர் என்பதும் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டியில் மழை வந்தால் ஆட்டம் நின்ற நேரத்தில் கணக்கில் கொண்டு அந்த நேரங்கள் மட்டும் ரிசர்வ் நாளில் போட்டி நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. 
 
ஆனால் அதே நேரத்தில் போட்டி டிராவில் முடிந்தால் இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்து அளிக்கப்படும் என்றும் இரு அணிகளுமே சாம்பியன் பட்டம் பெற்றதாக அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிடத்தக்கது. 
 
மற்ற தொடர்களில் இருப்பது போல் அதிக புள்ளிகள் எடுத்தது யார்? அதிக போட்டியில் வெற்றி பெற்றது யார் என்ற கணக்கு இதில் கணக்கிடப்படாது என்றும் போட்டி டிராவில் முடிந்தால் இரு அணிகளுமே வெற்றி பெறுவதாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran