வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 3 பிப்ரவரி 2018 (13:06 IST)

உலக கோப்பை இறுதி போட்டியில் வெற்றியை நோக்கி இந்தியா

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றியை நோக்கி செல்கிறது.

 
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. அரை இறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி உலக கோப்பையை இந்திய அணி நிச்சயம் வெல்லும் என்று கூறி இருந்தார். 
 
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரமீஸ் பாகிஸ்தான் அணிக்கு ராகுல் டிராவிட் போன்று ஒரு சிறப்பான பயிற்சியாளர் வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இன்று ஆஸ்திரேலியா - இந்தியா இடையேயான இறுதி போட்டி நடைபெற்று வருகிறது.
 
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 47.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 216 ரன்கள் குவித்தது.
 
இதையடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது. 30 ஓவர் முடிவில் இந்திய அணி தற்போது 2 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்துள்ளது. வெற்றியை நோக்கி முன்னேறி சென்று கொண்டிருக்கிறது இந்திய அணி. 
 
இந்த போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் இந்திய அணி நான்காவது முறையாக உலக கோப்பையை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.