புரோ கபடி 2018: பெங்களூரு, ஜெய்ப்பூர் அணிகள் வெற்றி

Last Updated: செவ்வாய், 18 டிசம்பர் 2018 (23:24 IST)
புரோ கபடி போட்டி தொடர் தொடங்கி 11வது வாரம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் பெங்களூரு மற்றும் ஜெய்ப்பூர் அணிகள் வெற்றி பெற்றன

முதலில் நடைபெற்ற பெங்களூரு மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி எந்தவித விறுவிறுப்பும் இன்றி மிக எளிதாக பெங்களூரு அணி 44-28 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

அதேபோல் இன்று நடைபெற்ற மற்றொரு போட்டியான ஜெய்ப்பூர் மற்றும் ஹரியானா அணிகளுக்கு இடையிலான போட்டி ஓரளவு கடுமையாக இருந்தாலும் இறுதியில் ஜெய்ப்பூர் அணி 39-30 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.

இன்றைய போட்டிக்கு பின்னர் ஏ பிரிவில் மும்பை, குஜராத், டெல்லி அணிகள் முதல் மூன்று இடங்களிலும், 'பி பிரிவில் பெங்களூரு, பாட்னா, தெலுங்கு டைட்டன்ஸ் ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களிலும் உள்ளது


இதில் மேலும் படிக்கவும் :