செவ்வாய், 6 ஜூன் 2023
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated: புதன், 1 பிப்ரவரி 2023 (08:01 IST)

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டி.. தொடரை வெல்வது யார்?

hardik
இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. 
 
ஏற்கனவே நடைபெற்ற இரண்டு டி20 போட்டிகளில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியும் இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்றுள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெல்லும் அணியே தொடரை வெல்லும் அணி என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனை அடுத்து இரு அணிகளும் இன்றைய போட்டியில் வென்று தொடரை வெல்ல தீவிர முயற்சி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்திய பேட்மேன்கள் மற்றும் பவுலர்கள் நல்ல பார்மில் இருப்பதால் இந்தியா தொடரை வெல்ல அதிகமாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் நியூசிலாந்து அணி அவ்வளவு எளிதில் தொடரை விட்டுக் கொடுக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva