1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified திங்கள், 2 மார்ச் 2020 (07:38 IST)

சென்னை வந்தார் தல தோனி: களைகட்டும் ஐபிஎல்

சென்னை வந்தார் தல தோனி
இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டி வரும் 29ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் முதல் போட்டி சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. மும்பையில் முதல் போட்டி நடைபெற இருந்தாலும் ஒருசில நாட்கள் சென்னையில் பயிற்சியில் ஈடுபட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் ஒவ்வொருவராக சென்னை வந்து கொண்டிருக்கின்றனர் 
 
ஏற்கனவே அம்பத்தி ராயுடு உள்பட ஒருசில வீரர்கள் சென்னைக்கு வந்து விட்ட நிலையில் நேற்று கேப்டன் தல தோனி சென்னை வந்தடைந்தார். அவரது வருகையை அறிந்த சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இது குறித்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் சென்னைக்கு வர தொடங்கியுள்ளதை அடுத்து ஐபிஎல் போட்டி களைகட்ட தொடங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருசில நாட்கள் சென்னை மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடும் சிஎஸ்கே வீரர்கள் வரும் 20ஆம் தேதிக்கு மேல் மும்பையில் நடைபெறும் முதல் போட்டியில் விளையாட மும்பை செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது