திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 10 அக்டோபர் 2022 (17:43 IST)

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: 37 ரன்களில் தாய்லாந்தை சுருட்டிய இந்தியா!

india vs thailand
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: 37 ரன்களில் தாய்லாந்தை சுருட்டிய இந்தியா!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் இந்திய மகளிர் அணிக்கும் தாய்லாந்து மகளிர் அணிக்கும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தாய்லாந்து அணியை இந்திய அணி வெறும் 37 ரன்களில் சுருட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய தாய்லாந்து அணி வீராங்கனைகள் ஒருவர் கூட சரியாக பேட்டிங் செய்யவில்லை 
 
தொடக்க வீராங்கனை தவிர மற்ற அனைத்து வீராங்கனைகளும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டத்தை இழந்தனர் என்பதும் இதில் பெரும்பாலானோர் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனையடுத்து 15.1 ஓவர்களில் 37 ரன்களுக்கு தாய்லாந்து அணி ஆட்டமிழந்த நிலையில் 38 என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது. இந்திய அணி 6 ஓவர்களில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 40 ரன்கள் எடுத்ததை அடுத்து இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது என்பதும் புள்ளி பட்டியலில் தற்போது 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva