வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By J.Durai
Last Modified: கோயம்புத்தூர் , புதன், 22 மே 2024 (17:49 IST)

மாநில அளவிலான தாங் டா விளையாட்டு போட்டிகளில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 300 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..

மாநில அளவிலான தாங் டா விளையாட்டு போட்டிகளில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 300 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.. 
 
கோவையில் மாநில அளவிலான தாங் டா போட்டிகள் திருச்சி சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. வாள் வீச்சு,மற்றும் கேடய வாள் வீச்சு என நடைபெற்ற இதில்,கோவை,நெல்லை,கன்னியாகுமரி, மதுரை,திருச்சி என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 300 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.
 
இதன் துவக்க விழா,தமிழ்நாடு தாங் டா சங்கத்தின் நிறுவனர் தலைவர் செல்வராஜ் ஆசான் தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக காவலர் பயிற்சி மையத்தின் முதல்வர்,துணை காவல் கண்காணிப்பாளர் செட்ரிக் மானுவேல் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில்,கற்பகம் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு இயக்குனர் சுதாகர்,மருத்துவர் லியோ பெர்னார்டு ,தமிழ்நாடு தாங் டா சங்கத்தின் பொது செயலாளர் பாண்டியன்,கோவை மாவட்ட தாங் டா சங்க செயலாளர் சரண்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
மினி சப் ஜூனியர், சப் ஜூனியர்,ஜூனியர்,சீனியர் என எடை அடிப்படையில்  நான்கு பிரிவுகளாக  நடைபெற்ற இதில்,மாணவ,மாணவிகள் ஒருவருக்கொருவர் வாளை லாவகமாக  வீசினர்.இதில் தேர்வு செய்யப்படும் வெற்றியாளர்கள் மணிப்பூரில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளதாகவும், மத்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டான இதை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் இணைக்க தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்த அவர்,இதனால்  தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் தமிழக வீரர்கள்  சாதனை படைக்க இயலும் என தமிழ்நாடு  தாங் டா சங்கத்தின் தலைவர் செல்வராஜ் ஆசான்  நம்பிக்கை தெரிவித்தார்.