திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 29 செப்டம்பர் 2024 (17:02 IST)

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது நியூசிலாந்து..!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்துள்ளது,

 செப்டம்பர் 26 ஆம் தேதி, இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 5 விக்கெட்டை இழந்து 602 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளர் செய்தது.

இலங்கை அணியின் சண்டிமால் 116 ரன்களும், மெண்டிஸ் 182 ரன்களும், குசால் மெண்டிஸ் 106 ரன்களும் அடித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மூன்று வீரர்களும் சதம் அடித்தனர் என்பதும் சிறப்பு.

இதனை அடுத்து, நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் வெறும் 88 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பிரபா ஜெயசூர்யா அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து ஃபாலோ ஆன் ஆன நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ்  விளையாடிய நியூசிலாந்து அணி   360 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால், இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 154 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Edited by Siva