ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 4 ஜூன் 2018 (22:28 IST)

போட்டிக்கு சில நிமிடங்களுக்கு திடீரென விலகிய செரினா வில்லியம்ஸ்

அமெரிக்காவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், ரஷ்யாவின் மரியா ஷரபோவாவை எதிர்த்து இன்று பிரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் தொடரில் 4வது சுற்றில் விளையாட இருந்தார்.
 
குழந்தை பெற்ற பின்னர் செரினா பங்கு கொள்ளூம் முதல் தொடர் என்பதாலும், பல ஆண்டுகளுக்கு பின் அவர் ஷரபோவாவுடன் மோதும் போட்டி என்பதாலும் இந்த போட்டிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
 
ஆனால் இந்த போட்டி தொடங்குவதற்கு ஒருசில நிமிடங்களுக்கு முன் இந்த போட்டியில் இருந்து தான் விலகுவதாக செரினா வில்லையம்ஸ் அறிவித்தார். இதனால் டென்னிஸ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
 
கடந்த சனிக்கிழமை நடந்த 3வது சுற்றின்போதே தோள்பட்டையில் காரணம் ஏற்பட்டதாகவும், ஞாயிறு அன்று நடைபெற்ற இரட்டையர் போட்டியில் விளையாடும்போது அந்த காயம் தீவிரம் அடைந்ததாகவும், சர்வீஸ் போட முடியாத அளவுக்கு வலி இருந்ததால் இந்த போட்டியில் இருந்து விலகுவதாகவும் செரீனா தனது ரசிகர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
 
செரினா போட்டியில் இருந்து விலகியதை அடுத்து மரியா ஷரபோவா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதனால் அவர் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.