திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 29 ஏப்ரல் 2021 (09:04 IST)

பண்ட்டுக்கு 3 மார்க்குதான் கொடுப்பேன்… சேவாக் காட்டம்!

டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டின் கேப்டன்சிக்கு 3 மதிப்பெண்கள் மட்டுமே கொடுப்பேன் என சேவாக் கூறியுள்ளார்.

ஆர் சி பி அணிக்கெதிரான போட்டியில் டெல்லி அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த தோல்விக்கு பண்ட்டின் கேப்டன்சி குறைகளே காரணம் என சொல்லப்பட்டது. இந்நிலையில் அதுபற்றி பேசியுள்ள சேவாக் பண்ட்டின் கேப்டன்சிக்கு 10 க்கு 3 மதிப்பெண்களே கொடுப்பேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் ‘ஒரு சிறந்த கேப்டன் தன்னிடமுள்ள பந்துவீச்சாளர்களை எப்படி சிறப்பாக கையாள வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ளவேண்டும். உங்கள் பிரதான பந்துவீச்சாளரை கடைசி ஓவருக்கு வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் விருப்பமான ஒருவருக்கே நீங்கள் பந்தைக் கொடுக்க வேண்டி இருக்கும். ரிஷப் பந்த் நல்ல கேப்டனாக வேண்டுமெனில், சிறு சிறு விஷயங்களை அவர் கவனம் செலுத்த வேண்டும்.  அப்போதுதான் அவர் ஸ்மார்ட் கேப்டனாக முடியும்’ எனக் கூறியுள்ளார்.