ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 21 பிப்ரவரி 2022 (10:01 IST)

கங்குலி சொன்னதை நம்பினேன்… ஆனால் நடந்தது வேறு – விருத்திமான் சஹா அதிருப்தி!

இந்திய டெஸ்ட் அணியின் மாற்று விக்கெட் கீப்பர்களில் ஒருவரான விருத்திமான் சஹா பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் பிசிசிஐ தலைவர் கங்குலி ஆகியோர் பற்றிய தன் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

விருத்திமான் சஹா தோனியின் ஓய்வுக்குப் பின்னர் இந்திய டெஸ்ட் அணிக்கு விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தார். ரிஷப் பண்ட்டின் வருகைக்குப் பிறகு அவர் மாற்று விக்கெட் கீப்பராக அணிக்குள் இருந்தார். ஆனாலும் அவருக்கு அதிகளவில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் இப்போது அவர் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தனது அதிருபதியை வெளிப்படுத்தியுள்ள சஹா ‘இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டிராவிட் என்னை ஓய்வு குறித்து பரிசீலிக்க சொன்னார். மேலும் நான் இனிமேல் அணிக்குள் பரிசீலிக்கப்பட மாட்டேன் என்றும் கூறினேன். ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் நான் நியுசிலாந்துக்கு எதிரான போட்டியில் நான் சதம் அடித்த போது எனக்கு வாட்ஸ் ஆப்பில் பாராட்டுகளை தெரிவித்தார் வாரியத் தலைவர் கங்குலி. அவர் மேலும் நான் வாரியத்தலைவராக இருக்கும் வரை ‘நான் எதற்கும் கவலைப்பட வேண்டாம்’ எனக் கூறினார். ஆனால் எல்லாம் மாறிவிட்டது. இவ்வளவு வேகமாக ஏன் மாறியது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை’ எனக் கூறியுள்ளார்.